வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் - பரிசோதனையில் வயித்துக்குள் 3 கிலோ முடி... - மருத்துவர்கள் ஷாக்...!
வயிற்று வலியோடு மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் வயிற்றுக்குள் 3 கிலோ முடி இருந்ததைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்
சீனா, சான்சி என்ற மாகாணத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் தனது தாத்தா பாட்டிகளுடன் வசித்து வருகிறார்.
இப்பெண்ணின் பெற்றோர்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், இவர் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஷாக்கான மருத்துவர்கள்
இதனால், அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றினை ஸ்கேன் செய்து பரிசோதனை நடத்தினர். அப்போது, அப்பெண்ணின் வயிற்றில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அப்பெண்ணின் வயிற்றில் சுமார் 3 கிலோ அளவுக்கு தலை முடி, பந்து போல உருண்டை வடிவில் இருந்துள்ளது. இதைப் பார்த்ததும் உடனே, அப்பெண்ணிற்கு மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய திட்டமிட்டனர்.
இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 3 கிலோ முடியை அகற்றினர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,
பெற்றோர்கள் அரவணைப்பில் இல்லாத காரணத்தினால் தாத்தா பாட்டியுடன் வளர்ந்து வரும் அந்த இளம் பெண்ணிற்கு தனது முடியை தானே உண்ணும் ஒரு வித வினோத பழக்கம் இருந்து வந்துள்ளார். தன் முடியை தானே அவர் உட்கொண்டுள்ளார். இது ஒரு விதமான நோய்.
ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பெண்ணால் உணவை அருந்த வயிற்றில் இடம் இல்லாமல் போயுள்ளது. அதாவது, தலை முடி வயிற்று பகுதியை அடைத்துக் கொண்டதால் மேற்கொண்டு உணவை சாப்பிடமுடியாமல் அப்பெண் அவதிப்பட்டு வந்துள்ளார்.
தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றில் இருந்த முடியை அகற்றியுள்ளோம் என்றனர்.
The incident reported from China revealed that surgeons removed a hairball the weight of a brick from her stomach after she swallowed them, having suffered from a disorder.
— WeJan (@WeJanNews) November 30, 2022
#china #Psychological #children #teenager #hair #food pic.twitter.com/6E6crmKyYR