ராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா - என்ன செய்கிறது தெரியுமா?
இந்தியா - சீனா எல்லையான LINE OF ACTUAL CONTROL பகுதியில் தங்கள் நாட்டு ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது.
ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் திபெத்தியர்களை ராணுவத்தில் சீனா சேர்த்து வருகிறது. இந்த ஆள் சேர்ப்பு நடவடிக்கை கட்டாயமான ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது.
அதேசமயம் திபெத்திய இளைஞர்களின் உண்மை மாறாத குணத்தை பரிசோதித்த பிறகே ராணுவத்தில் அவர்கள் சேர்த்துக் கொல்லப்படுவதாக இந்தியா டுடே பத்திரிகை தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
வானிலை மிகவும் மோசமாக உள்ள லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாதிரியான பகுதிகளில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை அதிகளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட செய்ய வேண்டும் என்ற முடிவில் சீனா உள்ளது. அதனால் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு சீன மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.