ரஷ்யாவின் மீது தடைவிதிப்பது ஒரு தலை பட்சமானது : ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுக்கும் சீனா

Russia China RussiaUkraineConflict
By Irumporai Feb 28, 2022 09:04 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடைகள் ஒரு தலைப்பட்சமானது எனக் கூறி சீனா தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷியா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. முன்னதாக இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு நேற்று தெரிவித்திருந்தது.

உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷியா எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தநிலையில் உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷியா முதன்முறையாக ஒப்புக்கொண்டது.

ரஷ்யாவின் மீது தடைவிதிப்பது ஒரு தலை பட்சமானது : ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுக்கும் சீனா | China Opposes Sanctions On Russia

இந்த நிலையில் இன்று ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்த நிலையில், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடைகள் ஒரு தலைப்பட்சமானது எனக் கூறி சீன வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.    

ஆரம்பத்தில் இருந்து ரஷ்யாவிற்கு நட்பு நாடாக விளங்கி வரும் சீனா, ரஷ்யா மீது இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது சீனா.

முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவு அளித்திருந்தது  குறிபிடத்தக்கது.