சீனாவில் மீண்டும் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா - அடுத்த அலையா? அச்சத்தில் மக்கள்

China cases increases Coronavirus disease
By Anupriyamkumaresan Oct 22, 2021 05:00 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சீனா
Report

சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பள்ளிகள், சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் மீண்டும் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா - அடுத்த அலையா? அச்சத்தில் மக்கள் | China New Corona Virus Cases Increased Day By Day

ஐந்தாவது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் மீண்டும் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா - அடுத்த அலையா? அச்சத்தில் மக்கள் | China New Corona Virus Cases Increased Day By Day

ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.