சீனாவை மிரட்டும் கொரோனா - ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு கெரோனா தொற்று!
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகளை கடும் பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று சீனாவின் 12க்கும் மேற்பட்ட மாகாணங்களில் பரவியுள்ளது. இதனால் கடந்த 245 மணி நேரத்தில் 13,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 1,455 பேருக்கு அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 11,691 அறிகுறிகள் இன்றி கொரோனா உறுதியாகியுள்ளது.
புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா பரவல் காரணமாக சீனாவின் நிதி நகரமான ஷாங்காய் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நகரில் வசிக்கும் 2.5 கோடி பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.