நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது: 4 மாத குழந்தையை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !
சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதில் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்துள்ள கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக இருப்பதால் போக்குவரத்தும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுவரை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் தாயும் 4 மாத குழந்தையும் சிக்கி தவித்துள்ளனர். மீட்பு படையை பார்த்த தாய், எப்படியாவது குழந்தையை காப்பாற்றிவிட துணிந்த அந்த தாய் குழந்தையை அங்கிருந்த மீட்பு படையினரிடம் தூக்கி எறிந்துவிட்டு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
A three-month-old baby is rescued from the debris of a collapsed building in the flood-hit region of Zhengzhou.
— Sky News (@SkyNews) July 23, 2021
Read more about the floods in China: https://t.co/0W1ZLYhyyI pic.twitter.com/KyP4XconLX
குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரை நீத்த தாயின் செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.