இந்திய கடற்படையின் பயிற்சியை கண்காணித்த சீனா - அதிர வைக்கும் தகவல்
China
India
By Thahir
தென் சீனக் கடலில் நடந்த இந்திய கடற்படையின் ஆசியான் பயிற்சியை சீன போர் கப்பல்கள் கண்காணிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்தியாவை கண்காணித்த சீனா
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், ஆசியான் அமைப்பின் நாடுகளுடன் இந்திய கடற்படைப் பயிற்சியின் போது சீனக் கப்பல்களும், விமானங்களும் கண்காணிக்க முயற்சி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் மிலிஷியா வகை கப்பல்கள் காணப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பயிற்சியின் போது சீனக் கப்பல்கள் நெருங்கி வந்தாலும் பயிற்சியை தடுக்கவில்லை என்றும் அதே நேரம் அவற்றின் செயல்பாடுகள் கண்ணகாணிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.