இந்தியாவின் சோகத்தையும் , இந்திய ராணுவத்தையும் கேலி செய்யும் சீன பத்திரிக்கை

china bipinrawat indianarmy
By Irumporai Dec 10, 2021 07:51 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தியாவின் மிகப்பெரிய சோகத்தை சீனா கேலி செய்கிறது. முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இழப்பு குறித்து அந்நாட்டின் அதிகாரபூர்வ நாளேடு தெரிவித்திருக்கும் கருத்து அதிர்ச்சிளிக்கிறது

சீனாவின் அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் (Global Times)ம் இந்திய ராணுவத்தை கிண்டல் செய்ததுடன், இந்திய ராணுவத்தில் ஒழுக்கம் மற்றும் போர் தயார்நிலையில் பெரும் குறைபாடு என்று கூறியுள்ளது.

மேலும், இந்திய ராணுவத்தை கிண்டல் செய்ததுடன், இந்திய ராணுவத்தில் ஒழுக்கம் மற்றும் போர் தயார்நிலையில் பெரும் குறைபாடு இருப்பதை இந்த ஹெலிகாப்டர் விபத்து நிரூபித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சோகத்தையும்  , இந்திய ராணுவத்தையும்  கேலி செய்யும் சீன பத்திரிக்கை | China Mocking Indian Army Happine Bipin Rawat

சீனா இந்திய எல்லையில் அத்துமீறி படையை குவித்த நேரத்தில் பிபினும் இந்திய படைகளையும் போர்த்தளவாடங்களையும் கால்வான் பள்ளத்தாக்கை நோக்கி நகர்த்த உத்தவிட்டார்.

பிபின் தலைமையிலான இந்திய ராணுவத்தில் வழக்கத்திற்கு மாறான ஆக்ரோஷ நடவடிக்கைகளை பார்த்த சீனப்படை வாலை சுருட்டிக் கொண்டு பின்வாங்கியது.

எனவே சீனா ராணுவத்திற்கு எதிராக பிபின் எடுத்த துணிச்சலான முடிவே சீனா பின்வாங்க காரசமாக இருந்தது. பிபின் ராவத் எதிரிநாடுகளான சீனா, பாகிஸ்தானுக்கு சிம்ம செப்பனமாகவே இருந்து வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை பொழிவு அதிகமா இருந்து வருகிறது, விபத்து நடந்த அப்பகுதியில் மோசமான வானிலை நிலவுவதாகவும் மீட்புக்குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதுதான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது

உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நிலையில் சீன நாளேடு இந்தியாவின் துக்கத்திலும் இன்பம் காணும் இந்த நிலையினை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.