வருங்கால மாமியாருக்காக பிரசவ வலியை அனுபவித்த காதலன் - இறுதியில் நடந்த டிவிஸ்ட்
வருங்கால மாமியாரின் வேண்டுகோளுக்காக இளைஞர் செயற்கையாக பிரசவ வலியை அனுபவித்துள்ளார்.
பிரசவ வலி
மத்திய சீனாவின், ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு அவர் காதலித்து வந்த இளைஞருடன் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அந்த பெண்ணின் தாய், உன்னை வருங்காலத்தில் நல்ல முறையில் கவனித்து கொள்ள, நிச்சயதார்த்ததிற்கு முன்னால், அவன் பிரசவ வலி போன்ற பெண்கள் அனுபவிக்கும் சவால்களை புரிந்து கொள்ள வேண்டும் என தனது மகளிடம் கூறியுள்ளார்.
சவாலை ஏற்ற காதலர்
இதனை அந்த பெண் தனது காதலனிடம் தெரிவித்த போது, முதலில் மறுத்தவர், அதன் பிறகு சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண் தனது காதலரை, பிரசவ வலி உருவகப்படுத்துதல் மையத்திற்கு சோதனைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பிரசவத்தின்போது கருப்பைச் சுருக்கங்களின் வலியை உருவகப்படுத்தி, தோல் மற்றும் தசைகளைத் தூண்டுவதற்கு மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளனர். முதல் 90 நிமிடங்கள் வலியின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து விட்டு, அதன் பிறகு அதிகபட்ச வலியை கொடுத்துள்ளனர்.
8 ஆம் நிலையில் வலியால் கத்த தொடங்கியவர், அதன் பிறகு, 10 ஆம் நிலையின் போது திட்டவும் அழவும் ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர், மூச்சுதிணறல் ஏற்பட்டு, வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
நிச்சயதார்த்தம் ரத்து
நானோ என் குடும்பத்தினரோ, உன்னை காயப்படுத்த வேண்டுமென்று இதை செய்யவில்லை. வருங்காலத்தில் நான் தாங்க வேண்டிய கஷ்டங்களை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பியதால்தான் இந்த சோதனை நடந்தது என தனது காதலனிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு பின்னர் கடும் வயிறுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில், சிறுகுடலின் ஒரு பகுதி மீளமுடியாத அளவுக்கு சேதமடைந்திருப்பதை கண்டறிந்து, சிறுகுடலின் ஒரு பகுதியை அகற்றியுள்ளனர்.
அவர் குணமடையும் வரை நான் முழுபொறுப்பேற்க தயார் என அந்த நபரின் காதலி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரை பார்க்க மருத்துவமனைக்கு வர வேண்டாம் என கூறிய காதலனின் தாய் நடக்கவிருந்த நிச்சயதார்தத்தை ரத்து செய்ததோடு, அந்த பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
