தங்க ஏடிஎம்; நகையை வைத்தால் 30 நிமிடத்தில் பணம் - எங்கே தெரியுமா?
முதல்முறையாக தங்க ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தங்க ஏடிஎம்
சீனாவின் ‛கிங்ஹுட் குழு' என்ற நிறுவனம் சார்பில் தங்க ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. . ஷாங்காய் நகரில் உள்ள தனியார் மாலில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது.
இதன்மூலம், பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் தங்கநகையை விற்பனை செய்யலாம். தங்கநகையை பொதுமக்கள் இந்த ஏடிஎம்மில் வைக்க வேண்டும். அதன்பிறகு அந்த நகையை ஏடிஎம் இயந்திரம் உள்ளிழுத்து கொள்ளும்.
30 நிமிடத்தில் பணம்..
அதன்பிறகு நகையின் எடை குறித்த அறிவிப்பு ஏடிஎம் இயந்திரத்தில் காண்பிக்கப்படும். அதன்பிறகு நாம் ஓகே செய்தால் அந்த தங்கநகை உருக்கப்பட்டு விடும். மேலும் அதற்கு நிகரான பணம் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் அடுத்த 30 நிமிடத்தில் செலுத்தப்படும்.
இதற்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் 3 கிராமுக்கு மேலாக தங்கநகைகளை ஏடிஎம்மில் வைக்க வேண்டும். நகையின் தூய்மை 50 சதவீதத்திற்கு குறைவாக இருக்க கூடாது.
அண்மையில் ஒருவர் 40 கிராம் எடை கொண்ட நெக்லஸை இந்த தங்க ஏடிஎம்மில் வைத்து ரூ.4.2 லட்சம் ரூபாயை அரை மணிநேரத்தில் பெற்றுள்ளார். தற்போது அங்கு கூட்டம் அதிகரித்து வருகிறது.