இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர்: விசாரணைகள் தீவிரம்

china-india-boder-army
By Jon Jan 10, 2021 02:34 PM GMT
Report

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்.

இதனை தொடர்ந்து இதுநாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் தொடர்ந்து பதற்றம் நீடித்தது. மேலும் இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் நேற்று முன்தினம் அதிகாலை பாங்காக் ஏரியின் தென் பகுதிக்கு அருகே இந்திய எல்லைக்குள் காணப்பட்ட சீன வீரர் ஒருவரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் பிடித்தனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ராணுவம், இந்திய எல்லைக்குள் பிடிக்கப்பட்ட சீன வீரர் உரிய விதிமுறைகளின் கீழ் கையாளப்படுகிறார்.

எதற்காக இந்திய எல்லைக்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.