அதிர்ச்சி தகவல்..! சீனாவில் குறைந்தது மக்கள் தொகை

COVID-19 China
By Thahir Jan 17, 2023 07:25 AM GMT
Report

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இந்த ஆண்டு மக்கள் தொகை குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறைந்தது மக்கள் தொகை 

கடந்த 60 ஆண்டுகளில் சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவதுதான் வரலாறு இருக்கும் நிலையில் முதல் முறையாக இந்த ஆண்டு மக்கள் தொகை குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தகவல்..! சீனாவில் குறைந்தது மக்கள் தொகை | China Has The Least Population

கடந்த 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எட்டரை லட்சம் பேர் குறைந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக தான் சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளதாகவும் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இதன் மூலம் மிக அதிகம் என்று தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.