காதலிக்க ஒருவாரம்; மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை - என்ன இப்படி இறங்கிட்டாங்க.!

China
By Sumathi Apr 02, 2023 05:21 AM GMT
Report

சீனாவில் மாணவர்கள் காதலிப்பதற்கு ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை சரிவு

சீனாவில் , கடந்த சில வருடங்களாகவே, வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை இளையோரை விட அதிகமாக உள்ளது. அதுமட்டும் இன்றி வருவாய் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கையும், பிறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

காதலிக்க ஒருவாரம்; மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை - என்ன இப்படி இறங்கிட்டாங்க.! | China Giving Students A Week Off To Fall In Love

இதனை சரிகட்ட, 1 குழந்தை தான் என்று இருந்த நிலையில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்ட விதியை மாற்றி அமைத்தது. புதுமணத் தம்பதிகளுக்கு சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், நிலைமை சரிவந்த பாடில்லை.

 காதலிக்க லீவு

இந்நிலையில் நடப்பு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் காதலில் விழுவதற்காக ஒருவாரம் விடுமுறை அளித்துள்ளது. ஒன்பது கல்லூரிகள் மாணவர்களுக்காக இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. மாணவர்கள் இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்ளவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ளும் விதமாகவும்

வசந்த கால பிரேக் என இந்த விடுமுறையை சீனாவில் உள்ள Fan Mei Education Group என்ற கல்விக் குழுமம் நடத்தும் கல்லூரிகளில் இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையின் போது மாணவர்கள் டைரிகள் எழுதுவது, பெர்சனல் டெவலப்மண்ட் குறித்து ஆய்வு செய்வது மற்றும் ட்ரவல் வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்ற ஹோம்வொர்க்குகளையும் கொடுக்கப்பட்டுள்ளது.