காதலன் ஜட்டியில் விஷம் தடவிய காதலி - உடல் அழுகி பலியான பரிதாபம்

China Murder
By Karthikraja Mar 01, 2025 10:00 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 உள்ளாடையில் விஷம் தடவி காதலனை காதலி கொலை செய்துள்ளார்.

ஜோதிடர் உயிரிழப்பு

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நான்சோங்கில் உள்ள ஜோதிடர் சோவ்(zhou) (59). "நான் எனது 50களில் இறந்து விடுவேன்" என முன்னரே கணித்திருந்தார். 

death

அவரது கணிப்புப்படி 2017 ஆம் மே மாதம் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சைகள் அளித்து வந்த போதும் சிகிச்சை பலனின்றி உடல் அழுகி உயிரிழந்தார். 

முன்னாள் காதலனை பழி வாங்க சூப்பில் விஷம் கலந்த சிறுமி - சூப்பை குடித்த நண்பர்களும் பலி

முன்னாள் காதலனை பழி வாங்க சூப்பில் விஷம் கலந்த சிறுமி - சூப்பை குடித்த நண்பர்களும் பலி

கட்டாய கருக்கலைப்பு

பிரேத பரிசோதனை முடிவில், அவர் பராகுவாட் என்னும் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த விஷத்தால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இவரது காதலி ஜிங் தான் இந்த கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்தது.

2011 ஆம் ஆண்டு, ஜிங் தனது தாய் இறுதிக்கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது சோவால் தாயின் உடல்நிலையை சரி செய்ய முடியும் என நம்பி அவரின் உதவியை நாடினார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 

poison underwear

இதனையடுத்து ஷோவை அடிக்கடி கர்ப்பமாக்கிய ஜிங் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜிங் பலமுறை கேட்ட போதிலும், அதை மறுத்த அவர் தனது முன்னாள் மனைவியுடன் இனைந்து கொண்டுள்ளார்.

ஜட்டியில் விஷம்

ஜிங்கிடமிருந்து தப்பிக்க, தனக்கு புற்றுநோய் இருப்பதாக சோவ் பொய் சொல்லியுள்ளார். விரக்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஜிங், அந்த முடிவை கைவிட்டு சோவை பழிவாங்க திட்டமிட்டார்.

இதனையடுத்து, பராகுவாட்டின் விஷம் குறித்து இணையத்தில் ஆராய்ந்த ஜிங், அதை இருமல் சிரப்பில் கலந்தும், நான்கு ஜோடி ஜட்டியை அதில் நனைத்தும், சோவிடம் கொடுத்தார்.

இருமல் சிரப்பைக் குடித்த உடனே ஷோவுக்கு தொண்டையில் கடுமையான வலி ஏற்பட்டது. மேலும் அவர் விஷம் கலந்த ஜட்டியை அணிந்தபோது, ​​அவரது உடல் அழுகத் தொடங்கியது. இந்த கொலை வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.