சீன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 36 பேர் உடல் கருகி பலி - அதிர்ச்சி வீடியோ வைரல்
சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்தில் 36 பேர் பலி
சீனா, ஹெனான் மாகாணம், அன்யாங் நகரில் உள்ள பட்டறை ஒன்றில் பயங்கர தீ விபத்தில் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும், விபத்தில் காயமடைந்த 2 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவில்லை.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
⚡️A massive reported fire at a factory in the central Chinese province of Henan: 36 people were killed, 2 were injured and 2 were missing, according to local TV.
— OsintTv? (@OsintTv) November 22, 2022
The cause of the fire is currently unknown.#China pic.twitter.com/970x3o23f3
BREAKING ?? : At least 36 people have been killed after a fire broke out in a workshop in Anyang city in central #China pic.twitter.com/3dCMIv2lOa
— Zaid Ahmd (@realzaidzayn) November 22, 2022