சீனாவில் மீண்டும் உயரும் கொரோனா... பள்ளிகளை மூட உத்தரவு : அதிர்ச்சியில் உலக நாடுகள்
சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது உலகநாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கடைசியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளில் முதல் அலை, 2 ஆம் அலை என்ற பெயரில் பெரும் மனித இழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தற்காலிக தீர்வாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் இருந்து அனைத்து மாநிலங்களும் மெல்ல மீண்டு வரும் நிலையில், கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில்5 மாகாணங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைநகர் பெய்ஜிங் நகரில் பெருமளவு பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.