தாலிபான்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சீனா: முதல் கட்டமாக ரூ.220 கோடி நிதி ஒதுக்கீடு

china taliban Wang-yi
By Irumporai Sep 10, 2021 10:56 AM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமைத்துள்ள அரசினை அங்கீகரித்துள்ள சீனா முதற்கட்டமாக 220 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆப்கானில் தாலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசுக்கு உதவி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் முதற்கட்டமாக 220 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்குவதாக கூறினார். சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்குறுதிகளை தாலிபான்கள் நிறைவேற்ற வேண்டும் என்று வாங்-யி கூறினார்.