விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் காட்டு தீ...மீட்பு பணிகள் தாமதம்..!

Rescue சீனா ChinaAirplaneCrash ChinaEasternAirlinesCrash RescueDelay விமானம்விபத்து விமானம்
By Thahir Mar 22, 2022 12:00 AM GMT
Report

சீனாவின் போயிங் 737 ரக விமானம் மலையில் மோதி நொறுங்கிய இடத்தில் காட்டு தீ பரவியுள்ளதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பயணிகளுடன் நேற்று புறப்பட்டது.

விமானம் குவாங்சி மகாகாணத்தில் உள்ள மலைப்பகுதியின் மேற் பகுதியில் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை வந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை,விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்க கூடும் என கருதப்படுகிறது.

505 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் மீண்டும் 450 வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விமானம் விழுந்த இடத்தில் காட்டு தீ பரவி இருப்பதால் மீட்புப்பணியில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.