சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்... - பள்ளி குழந்தைகள் அலறி அடித்து ஓடிய அதிர்ச்சி வீடியோ வைரல்..!
சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடங்கள் குலுங்கிய போது பள்ளி குழந்தைகள் பயந்துக்கொண்டு ஓடிய அதிர்ச்சி வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில், தென்மேற்கு சிச்சுவான் மாகாணம், லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
இதனால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலநடுக்கத்தில் 248 பேர் காயமடைந்துள்ளனர். 12 பேரை காணவில்லை. நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

வைரலாகும் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடங்கள் குலுங்கிய போது பள்ளி குழந்தைகள் பயந்துக்கொண்டு ஓடிய அதிர்ச்சி வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A moving scene captured by cameras:
— Zhang Meifang张美芳 (@CGMeifangZhang) September 6, 2022
Teachers in Hanyuan County, SW China’s Sichuan rushed into the classroom and picked up children who were taking a nap while evacuating when a 6.8-magnitude earthquake hit the province on Sep 5.pic.twitter.com/h3gGBr1OY2