சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்கள்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video China Earthquake
By Nandhini Sep 06, 2022 10:36 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில், தென்மேற்கு சிச்சுவான் மாகாணம், லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலநடுக்கத்தில் 248 பேர் காயமடைந்துள்ளனர். 12 பேரை காணவில்லை. நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

viral video

வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழும் அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.