சீனா நிலநடுக்கத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அதிபர் சாய் இங்-வென் இரங்கல்...!
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தைவான் அதிபர் சாய் இங்-வென் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில், தென்மேற்கு சிச்சுவான் மாகாணம், லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலநடுக்கத்தில் 248 பேர் காயமடைந்துள்ளனர். 12 பேரை காணவில்லை. நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
அதிபர் சாய் இங்-வென் இரங்கல்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தைவான் அதிபர் சாய் இங்-வென் இரங்கல் தெரிவித்துள்ளார்.

President Tsai Ing-wen has offered her condolences to the families of people killed by a magnitude 6.8 earthquake in Sichuan province, China. https://t.co/VyP2U2lVeI pic.twitter.com/DXTiLyyUr9
— Radio Taiwan International (@RadioTaiwan_Eng) September 6, 2022