சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது
சீனாவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில், தென்மேற்கு சிச்சுவான் மாகாணம், லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
நில சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. நில சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை உயர்ந்தது
இந்நிலநடுக்கம் 16 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்திற்கு உயிரிழப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 248 பேர் காயமடைந்துள்ளனர். 12 பேரை காணவில்லை. நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
A man under rubble was successfully saved by the rescue team with team members' bare hands.
— Caoli 曹利 (@Cao_Li_CHN) September 5, 2022
At least 30 people confirmed to be killed till now in the 6.8-magnitude earthquake in Luding County, Ganzi, Sichuan of China???#Ludingearthquake pic.twitter.com/tdRN8QUPUv