மொழி தெரியாமல் சொன்ன ஐ லவ் யூ - அமெரிக்கப் பெண்ணுடன் திருமணம்!
மொழி தெரியாமல், தவறுதலாக சொன்ன ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தை கல்யாணமாக மாறியுள்ளது.
ஐ லவ் யூ
அமெரிக்காவின் அலபாமா பகுதியை சேர்ந்தவர், ஹன்னா ஹாரீஸ். மழலையர் பள்ளி ஆசிரியையான இவர், ஆங்கிலம் கற்பிப்பதற்காக சீனாவின் ஷென்யாங் நகருக்குச் சென்றிருந்தார்.
அப்போது ஒருநாள் அவர் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்திருந்தார். அதை டெலிவரி செய்ய லியு(27) என்பவர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது லியு ஆங்கிலத்தில் பேச முயன்றார்.
வைரல் காதல் கதை
அப்போது அவர், 'ஹலோ ஐ லவ் யூ' என்று தவறுதலாகக் கூறியுள்ளார். அதைக் கேட்டு ஹாரீஸ் சிரித்துள்ளார். பின்பு, எனக்கு ஆங்கிலம் அதிகம் பேச வராது. அதனால் நான், ஹலோ, ஐ லவ் யூ எனத் தெரியாமல் சொல்லிவிட்டேன் என விளக்கமளித்துள்ளார்.
இருவரும் தொடர்ந்து பேசியபோது அவர்களின் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருந்தது. அது காதலாக மாறியுள்ளது. அடுத்த 5 மாதங்களில் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஹன்னாவின் பெற்றோர் அமெரிக்காவிலிருந்து வீடியோ மூலம் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர். தற்போது அவர்களுடைய காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.