மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: சீனாவின் அதிரடி நடவடிக்கை
சீனாவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கு தடுப்பூசி மட்டும்தான் தற்போதைய தீர்வு என்பதால் உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சீனாவில் வெகு விரைவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Sinovac என்ற கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அவசர கால மருத்துவ உதவியாக இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து குழந்தைகளின் உடலில் எப்படி செயல்படுகிறது, பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா? என்ற முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளும் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.