சீனாவில் பரவும் கொரேனா தொற்று..முழு ஊரடங்கு மீண்டும் அமல் - வீடுகளில் முடங்கிய மக்கள்..!
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து கொரேனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவதொடங்கியது. அமெரிக்கா,இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தனர்.
பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்டவற்றை அமல்படுத்தியது.
இந்நிலையில் தற்போது உலக நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று தலைதுாக்க துவங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக சீனாவின் உள்ளூர் நகர் பகுதிகளில் கொரேனா தொற்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி சீனாவில் 3.400க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் யாஞ்சி மாகாணத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெருகி வரும் கொரோனா பரவல் காரணமாக 1.3 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளன.
You May Like This