சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - கோவிஷீல்டு நிர்வாக அதிகாரி வேதனை

COVID-19 China
By Thahir Dec 22, 2022 02:37 AM GMT
Report

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் பற்றிய செய்தி உண்மையில் வேதனை அளிக்கிறது. என கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் அந்த நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் துவங்கியுள்ளன.

மேலும், சில நாடுகளில் இதே போல கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்றான கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனம் செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா ,

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - கோவிஷீல்டு நிர்வாக அதிகாரி வேதனை | China Covid Case Increase

‘சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் பற்றிய செய்தி உண்மையில் வேதனை அளிக்கிறது.

இருந்தும் எங்களது தடுப்பூசி பாதுகாப்பான பாதையில் செல்வதால் நாம் பயப்பட தேவையில்லை.’ எனவும், ‘ இந்திய அரசு மற்றும் சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.’ எனவும் தனது டிவீட் மூலம் ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.