சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - வணிக நிறுவனங்கள் மூடல்
Corona
China
Closed
Increase
Shops
By Thahir
சீனாவின் ரஷிய எல்லையில் உள்ள ஹெய்ஹே நகரத்திலும் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. சீனாவில், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டாம் தேதியன்று நாடு முழுவதும் 93 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களில் முறையே 109 மற்றும் 104 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இவற்றில் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். குறிப்பாக ரஷிய எல்லையில் உள்ள ஹெய்ஹே நகரத்திலும் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் கடந்த மூன்றாம் தேதி முதல் அங்குள்ள வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.