எந்த நேரத்திலும் போருக்கு தயார் நிலையில் ராணுவம்: சீன ஜனாதிபதியின் உத்தரவு
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தமது நாட்டின் இராணுவம் எந்த நேரத்திலும் செயல்படவும் முழுநேர போருக்கும் தயார்நிலையில் இருக்கவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் தைவானுடனான பதட்டமான சூழ்நிலைகளுக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி இராணுவ தளபதிகளும் துருப்புகளும் மரண பயமின்றி, கடுமையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அவர் அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100 வது ஆண்டு விழாவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். மட்டுமின்றி, ராணுவம் மற்றும் வீரர்களுக்கான பயிற்சியில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதை கணிசமாக அதிகரிக்க வேண்டும்.
இராணுவத்தில் புதிய கருவிகள் மற்றும் படை வீரர்களை இணைப்பதை அதிகரிக்க வேண்டும் எனவும் ஜி ஜின்பிங் ஆணை பிறப்பித்துள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் சீனா தனது அண்டை நாடான இந்தியா மற்றும் தைவானுடன் அதிகரித்த பதட்டங்களைக் கண்டது.
இந்த இறுக்கமான போக்கு இமயமலை எல்லையில் கடந்த ஜூன் மாதத்தில் இரத்தக்களரி மோதலின் உச்சத்தை அடைந்தன,
அதில் 20 இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர், சீனா தரப்பிலும் வெளியிடப்படாத எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.