முதியோர்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!
கொரோனா பாதிப்பால் மருத்துவமனை நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
2019ஆம் ஆண்டு சீனாவை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று, 2 வருடங்களை கடந்தும் இன்றும் விட்டபாடில்லை. அங்கு உயிரிழப்புகள் ஒருபுறம், பொருளாதார பாதிப்புகள் மறுபுறமென மக்கள் அல்லாடுகின்றனர். தற்போது வரை ஏறத்தாழ 65 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல 66.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது, சுமார் 8,626 பேர் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அல்லாடும் சீனா
தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்து விற்று தீர்ந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இங்கு 16.6 கோடி முதியவர்கள் இருக்கிறார்கள். இதனால் மருத்துவமனைகளிலும் அதிக அளவில் கூட்டம் அலை மோதி வருகின்றனர்.

தொடர்ந்து கட்டுப்பாடுகளை நீக்க கோரி பெரும் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம் பாதிப்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.