கருத்தடைக்கான வரி அதிகரிப்பு; அரசு முடிவு - மக்கள் எதிர்ப்பு
சீனாவில் ஜனவரி 1 முதல் கருத்தடை சாதனங்களுக்கான விற்பனை வரி 13% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பிறப்பு விகிதம்
அதிகாரிகள், குழந்தை பராமரிப்பு சேவைகள் மற்றும் திருமணம் தொடர்பான சேவைகள், முதியோர் பராமரிப்பு உள்ளிட்டவைகள் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) இலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளதையும் அறிவித்துள்ளனர்.

அங்கு மக்கள் தொகை மூன்று ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு, 9.54 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளார்கள்.
இது ஒரு தசாப்தத்திற்கு முன் பதிவாகிய எண்ணிக்கையை விட கணிசமாக குறைவு. இதனால் மக்கள், இதனால் எச்.ஐ.வி, ஏட்ஸ் மற்றும் பிற பாலியல் நோய்கள் பரவுவதில் அதிக அபாயம் உண்டாகும் எனக் கவலை தெரிவிக்கிறார்கள்.
வரி அதிகரிப்பு
மேலும், காண்டம் விலை உயர்த்துதல் மட்டும் குழந்தை பிறப்பை அதிகரிக்க உதவாது; நன்கு திட்டமிடப்பட்ட சமூக மற்றும் பொருளாதார ஆதரவு மட்டுமே மக்கள் விருப்பமிக்க திருமணமும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் உதவ முடியும் என்பதையே நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
முன்னதாக திருமணம் தொடர்பான செலவினங்களுக்கு வரி சலுகை, குழந்தை பராமரிப்பிற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.