வீட்டுப்பாடம் செய்யாததால் கண்டித்த தந்தை - போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்த 10 வயது மகன்
வீட்டுப்பாடம் செய்யாததால் கண்டித்த தந்தையை மகன் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளார்.
கண்டித்த தந்தை
சீனாவின் யோங்னிங் பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் சரியாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என அவரது தந்தை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதனால் தந்தை மீது கோபமடைந்த சிறுவன் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று, காவல் நிலையத்திற்கு போன் செய்து, தனது தந்தை வீட்டில் போதைப்பொருள் வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
போதைப்பொருள்
இதனை கேட்ட காவல்துறையினர் உடனடியாக வீட்டிற்கு வந்து வீட்டில் சோதனையிட்டுள்ளது. அந்த சோதனையில் வீட்டில் 8 ஓபியம் காய்கள் கண்டறியப்பட்டுள்ளது. தான் மருத்துவ காரணத்திற்காகவே ஓபியம் பயன்படுத்துவதாக சிறுவனின் தந்தை விளக்கமளித்துள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் ஓபியம் போதைப்பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அதை வைத்திருப்பது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான சிறிய குற்றங்களுக்கும் சீனா கடுமையான தண்டனை வழங்குகிறது.