சீனாவில் படகு கவிழ்ந்த கோர விபத்தில் 10 பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்

China Rescue boat capsize
By Thahir Sep 20, 2021 03:16 AM GMT
Report

சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியானார்கள். சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் நேற்று பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது.

தகவல் அறிந்து 50 படகுகளில் விரைந்த 17 மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் படகு கவிழ்ந்த கோர விபத்தில் 10 பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம் | China Boat Capsize Rescue

அவர்களில் 10 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்துக்குள்ளான படகில் பெரும்பாலனோர் மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.