பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் மாடலாக நடிக்கும் ஆண்கள் : காரணம் என்ன?
சீனாவில் பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடைவிதிக்கபட்டுள்ள நிலையில் , ஆண்கள் நடித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பெண்கள் நடிக்க தடை
சீனாவில் ஆபாசமான விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதை தடை செய்யும் சட்டம் அமலில் உள்ளது. அதன்படி ஆன்லைன் உள்ளாடை விளம்பரங்களில் பெண் மாடல்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே சீன உள்ளாடை நிறுவனங்கள் தற்போது புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
வைரலாகும் வீடியோ
அதாவது உள்ளாடை விளம்பரங்களில் தற்போது பெண்களுக்கு பதிலாக ஆண்களை பயன்படுத்தியுள்ளனர்இந்த வீடியோ சீனாவின் டிக் டாக் தளமான டொயின்-ல் படுவைரலாகி வருகிறது "The light and luxurious boudoir of the wife and adults," என்கிற தலைப்பில் இந்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இந்த விளம்பரங்களின் இயக்குநர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர்.
வீடியோ வெளியானதிலிருந்து 2000த்துக்கும் அதிகமான லைக்குகளையும் பல கமெண்ட்டுகளையும் பெற்றுவருகிறது