அரசாங்க ஊழியர்கள் I-phone பயன்படுத்த தடை..அதிரடியாக உத்தரவிட்ட அரசு
அரசாங்க ஊழியர்கள் இனி வேலை நேரங்களில் I-phone பயன்படுத்த தடைவிதித்து அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
I-phone
இன்றைய தேதியில் அனைத்து தரப்பு மக்களிடம் ஆன்ட்ராய்டு மொபைல் போன் இருக்கின்றது. விலையில் மாற்றங்கள் இருந்தாலும், அந்த சாதனம் இல்லாத மக்களே இல்லை என்ற அளவை தற்போது இவ்வுலகம் எட்டியுள்ளது.
இதில் தனித்து நிற்கும் மற்றொரு விஷயமென்றால் அது I-phone தான். ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் இருந்து முற்றிலும் மாறுபடும் இவ்வகை போன்கள் தற்போது ஒரு status குறியீடாகவே பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை
இந்நிலையில் தான் அரசு ஊழியர்கள் யாரும் தங்களின் பணியின் போது, I-phone'களை பயன்படுத்த கூடாது என சீனா நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் நாளேடு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வேளைக்கு வரும் போது I-phone'களை எடுத்து வருவதையும், வேலை நேரத்தின் போது அவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.