மகனின் காதலியை திருமணம் செய்த தந்தை - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகன்
மகனின் முன்னாள் காதலியை தந்தை திருமணம் செய்த நிகழ்வு வைரலாகி வருகிறது.
லியு லியான்கே
சீனாவின் 4 பெரிய வங்கிகளில் ஒன்றான Bank of China வின் சேர்மனாக இருந்தவர் லியு லியான்கே. 63 வயதான இவர் 141 கோடி லஞ்சம் பெற்றதற்காகவும், 3,887 கோடி அளவுக்கு சட்டவிரோத கடன்களை வழங்கியதாகவும் 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த லஞ்ச வழக்கை விசாரித்த ஜினான் இடைநிலை மக்கள் நீதிமன்றம், இவரது சொத்துக்களை பறிமுதல் செய்ததோடு, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மகனின் காதல்
இந்நிலையில் லியு லியான்கே தனது சொந்த மகனுக்கே துரோகம் செய்த தகவல் வெளியாகியுள்ளது. லியு லியான்கேவின் மகன் தான் காதலித்து வந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து தந்தையிடம் அறிமுகம் செய்துள்ளார்.
மகனின் காதலியை பார்த்த உடனே தந்தைக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பெண்ணின் வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவள். உனது பணத்திற்காகதான் அவள் உன்னை விரும்புகிறாள். நமது குடும்பத்திற்கு ஒத்துவர மாட்டாள்" என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவரது மகன், தந்தை சொன்னால் சரியாகதான் இருக்கும் என நம்பி அந்த பெண்ணுடனான காதலை முறித்துள்ளார்.
திருமணம்
இதன் பிறகு தனது செல்வாக்கு மூலம் மகனின் முன்னாள் காதலியை தேடி, அந்த பெண்ணிற்கு விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை வழங்கி அவளின் மனதில் இடம்பிடித்துள்ளார். மகனின் காதல் முறிந்த 6 மாதத்தில் அதே பெண்ணை லியு லியான்கே திருமணம் செய்துள்ளார்.
தனது முன்னாள் காதலியே தனக்கு தாய் ஆனது தெரிந்த அவரது மகன், அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் லியு லியான்கே தனது திருமண வாழ்க்கையை நீண்ட நாள் அனுபவிக்க முடியாமல் ஊழல் வழக்கில் சிறை சென்று விட்டார். லியு லியான்கேவிற்கு இது 4வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.