திபெத் விவகாரம்: எங்க விஷயத்தில் மூக்கை நுழைப்பதுதான் உங்கள் வேலையா ? - அமெரிக்கவை எச்சரிக்கும் சீனா !
திபெத் நாட்டை சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக முழுவதுமாக ஆக்கிரமிக்க பல ஆண்டு காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் திபெத் சீனா இடையே நடக்கும் விஷயங்களில் அமெரிக்க்கா தலையிடக்கூடது என சீன அரசு எச்சரித்துள்ளது.
திபெத் மதத் தலைவர் தலாய் லாமாவை உலகை அச்சுறுத்தும் பயங்கரமான பிரிவினைவாதி என கூறி வருகிறது சீன அரசு.
திபெத் நாட்டுடன் எப்போதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நட்பு பாராட்டி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் டெல்லியில் நடந்த கூட்டத்தில் திபெத் தலைவர் தலாய் லாமாவின் கார்யதரிசி மற்றும் தூதர் கோட்ப் டோங்சாங்-ஐ அவர் சந்தித்துப் பேசியதற்கு சீனா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோ லீஜியான் வெளியிட்டுள்ள கருத்தில் திபெத்-சீனா இடையே நடக்கும் விஷயங்கள் சீனாவின் உள் விவகாரம். இதில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் அரசு தொடர்ந்து திபெத்துக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.