பாலியல் பொம்மைகளில் AI தொழில்நுட்பம்; குவியும் ஆர்டர்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
செக்ஸ் பொம்மைகளில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதன் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது.
AI தொழில்நுட்பம்
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. மனிதர்கள் செய்யும் சில வேலைகளை கூட AI செய்வதால் பலரின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதே வேளை AI உதவியுடன் பல மைல் தூரத்தில் உள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து முடிப்பது போன்று மனிதகுலத்துக்கு பயனளிக்கும் வகையிலும் AI பயன்பாடு உள்ளது.
செக்ஸ் பொம்மைகள்
பாலியல் பொம்மைகளின் சந்தை மதிப்பு 45 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. தற்போது சீனாவை சேர்ந்த டபள்யூ.எம். டால்ஸ்(WMDoll) என்ற பொம்மை தயாரிக்கும் நிறுவனம் தனது பாலியல் பொம்மைகளில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விற்பனையை 30% அதிகரித்துள்ளது.
இந்த AI பாலியல் பொம்மைகளானது வழக்கமான பொம்மைகள் போல் அல்லாமல் சாஃப்ட் ஆன தோலில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, மனிதர்கள் இதனுடன் உரையாடலை நிகழ்த்த முடியும். 2 நாட்களுக்கு எந்த உரையாடலுடன் நிறுத்தினோமோ அதை அப்படியே தொடர முடியும். மேலும், இதை தொடும் போது பெண்களை போல் ஒலி எழுப்புவதோடு, 8 வெவ்வேறு குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது.
பொம்மை விலை
இது கிட்டத்தட்ட ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற உணர்வை கொடுப்பதால் இதை விலை அதிகம் இருந்தாலும் கூட வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஒரு பொம்மை தற்போது 1500 முதல் 2000 டாலர்(இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம்) விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வருடத்திற்கு பின்னர் பயன்பாட்டிற்கு ஏற்ப டோக்கன் முறையில் மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் இந்த பொம்மையுடன் பேசுவது உள்ளிட்ட தரவுகளை பொம்மை எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த நாட்டிலே சேமிக்கப் படுவதால், தகவல்கள் சீனாவிற்கு செல்லும் என தனியுரிமை குறித்து அச்சமடைய தேவையில்லை. மேலும், வாடிக்கையாளர் விரும்பினால் ஒரே கிளிக்கில் அனைத்து தரவுகளையும் அழித்து கொள்ளலாம்.