AI சந்தையை கலக்கும் சீனாவின் DeepSeek - ஒரே வாரத்தில் பின்னுக்கு சென்ற ChatGPT
சீனாவின் DeepSeek செயலி ஒரு வாரத்தில் ChatGPTயை பின்னுக்கு தள்ளியுள்ளது.
ChatGPT
செயற்கை நுண்ணறிவு துறை நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் Open AI நிறுவனத்தின் ChatGPT ஆதிக்கம் செலுத்தி வந்தது.
அதனையடுத்து கூகிள் நிறுவனம் AI செயலியை களமிறங்கியது. அதனை தொடர்ந்து, மைக்ரோசாப்ட்டின் Co Pilot, எக்ஸ் நிறுவனத்தின் Gork ஆகியவை சந்தைக்கு வந்தது.
DeepSeek
இந்நிலையில் கடந்த வாரம் சீனாவின் High-Flyer என்ற நிறுவனம் deep seek என்னும் AI செயலியை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியானது ஒரு வாரத்தில் ஆப்பிள் பிளே ஸ்டோரில் ChatGPT யை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.
டீப்சீக், ChatGPT போன்ற மற்ற செயலிகளை விட அதிகளவிலான செயல்திறனுடன் இருப்பதோடு, குறைந்த கட்டணத்தில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. DeepSeek R1 மற்றும் DeepSeek R1-0 என 2 ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை கோடிங் எழுதுவது போன்ற பணிகளில் மற்ற செயலிகளை விட சிறப்பான சேவையை வழங்குகிறது.
AI துறையில் அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சீனாவின் deep seek செயலிக்கு கிடைத்த வரவேற்பு அமெரிக்க நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. DeepSeek குறைந்த விலையில் தனது சேவைகளை வழங்கி வருவதால் பயனர்களை தக்க வைக்க ChatGPT போன்று சந்தையில் உள்ள மற்ற செயலிகளும் கட்டணத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.