புதுமண தம்பதிக்கு 30 நாள் சம்பளத்துடன் விடுமுறை - பலே திட்டம்
சீனாவில் புதுமண தம்பதிக்கு 30 நாள் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது.
மக்கள் தொகை
கடந்த சில ஆண்டுகளாக சீனா மக்கள் தொகை வளர்ச்சி கணிசமாக சரிவை சந்தித்து வருகிறது. 1980இல் சீனா அரசு ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெறக் கூடாது என சட்டம் இயற்றியதால் தற்போது அந்நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

அதன்பின், அந்நாட்டு மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2021ஆம் ஆண்டில் சட்ட விதியை மாற்றி அமைத்தது.
சம்பளத்துடன் விடுப்பு
இந்நிலையில், மக்கள்தொகை எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவே புதுமண தம்பதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு வழங்க சீனா முடிவெடுத்துள்ளது.
கன்சு, ஷான்சி போன்ற மாகாணங்கள் இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளன. ஷாங்காய் மாகாணம் 10 நாள் சம்பளத்துடன் விடுப்பு வழங்க முடிவெடுத்துள்ளது.