காண்போரை உருகச் செய்யும் சிம்பன்சி குரங்குகளின் கொஞ்சல்

Viral Video Monkey Chimpanzee
By Thahir Nov 16, 2021 06:11 PM GMT
Report

சிம்பன்சி குரங்குகள் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையதளத்தில் காண்போரை உருகச்செய்துள்ளது.

சிம்பன்சி குரங்குகள் கொஞ்சி விளையாடும் இந்த வீடியோவில் இரண்டு சிம்பன்சி குரங்குகள்(மனிதகுரங்குகள்), அவற்றின் குட்டியுடன் விளையாடுகின்றன.

இந்திய வனப் பணி அதிகாரியான சுஷாந்தா நந்தா இந்த அழகிய காணொலியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், மற்றொரு அதிகாரியான சுதா ராமன் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்த காணொலி குறித்து அவர் பதிவிட்டுள்ள தலையங்கத்தில், “ஒன்று சேர்ந்து விளையாடும் ஒரு குடும்பம், சேர்ந்தே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காண்போரை உருகச்செய்யும் இந்த மனிதகுரங்குகளின் செயல் மூலம், விலங்குகளுக்கும் பாசம் உண்டு, உணர்வுகள் உண்டு என்பது வெளிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சிம்பன்சி குரங்குகளுக்கு தண்ணீரில் நீந்த தெரியாது என்பது கூடுதல் சுவாரசியமான தகவல் ஆகும்.