தந்தையின் கண் முன்னே மகனை விழுங்கிய திமிங்கலம் - அடுத்த நொடியில் நடந்த அதிசயம்

Viral Video Chile
By Karthikraja Feb 14, 2025 05:15 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 திமிங்கலத்தின் வாய்க்குள் சென்று இளைஞர் உயிரோடு திரும்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

படகு சவாரி

சிலி நாட்டின் பஹியா எல் அகுய்லா என்ற பகுதியில் 24 வயது இளைஞரான அட்ரியன் சிமன்காஸ் தனது தந்தை டெல்லுடன் கடந்த சனிக்கிழமை(08.02.2025) படகு சவாரி செய்து கொண்டிருந்தார். 

chile whale swallow man

அப்போது, மாகெல்லன் ஜலசந்தியில் உள்ள சான் இசிட்ரோ கலங்கரை விளக்கம் அருகே பயணித்த போதே திடீரென கூம்பு முதுகு திமிங்கலம் ஒன்று அட்ரியன் சிமன்காஸை படகுடன் சேர்த்து விழுங்கியது.

விழுங்கி துப்பிய திமிங்கலம்

இதை மற்றொரு படகில் இருந்த அவரது தந்தை டெல் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். முதலில் ராட்சத அலை என நினைத்த அவருக்கு பின்னர் தான் விபரீதம் புரிந்தது. ஆனால் அதிசயமாக திமிங்கலம் அட்ரியன் சிமன்காஸை வெளியே துப்பியது. 

chile whale swallow man

நல்வாய்ப்பாக இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பதற்றத்தில் இருந்த மகனை "அமைதியாக இரு.. ஒன்றும் இல்லை" அவரது தந்தை சாந்தப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தப்பித்த அனுபவம்

திமிங்கலம், மீனைப் பிடிக்க வாயை அகலமாகத் திறந்து மேற்பரப்பை நோக்கிச் செல்லும் லுங்கி ஃபீடிங்கில் ஈடுபட்டிருக்கலாம். இந்த வகை திமிங்கலங்கள் மனிதர்களை தாக்காது, அதன் குறுகலான வாய்பகுதியால் மனிதர்களை விழுங்கவும் முடியாது என கடல் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து பேசிய அட்ரியன் சிமன்காஸ், அந்த திமிங்கிலம் என்னை மொத்தமாக விழுங்கியது. என்ன நடந்தது என்று தெரியாமலேயே உயிரிழந்துவிடுவேன் என நினைத்தேன். திடீரென என் முகத்தில் ஒளி அடித்தது. எனது லைஃப் ஜாக்கெட் என்னை மேலே இழுப்பதாக உணர்ந்தேன்.

மேலே வந்து மிதக்கத் தொடங்கியபோது, தந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ, பாதுகாப்பாக கரையை அடைய முடியுமா என்றெல்லாம் அச்சம் தோன்றியது என கூறினார். மீண்டும் படகு சவாரி செல்வீர்களா என கேட்கப்பட்டபோது, ​​தந்தை மகன் இருவரும் தயக்கமின்றி, "கண்டிப்பாக செல்வோம்" என பதிலளித்தனர்.