வாரத்திற்கு 40 மணி நேரம் தான்; வேலை நேரத்தை குறைத்த நாடு - எங்கு தெரியுமா?
சிலி நாடு வேலை நேரத்தைக் குறைத்து சட்டம் இயற்றியுள்ளது.
சிலி
பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள் வார வேலை நேரத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் வரிசையில், சிலியில் தற்போது மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு 45 மணி நேரமாக இருந்த வேலை நேரம், 40 மணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரான கேப்ரியல் போரிக் நீண்ட போராட்டத்திற்குப் பின்பு இதனை நிறைவேற்றியுள்ளார். இதனால் தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் முன்னுரிமை பெரும் நிலையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
வேலை நேரம்
இந்த மசோதாவிற்கு 127 பேர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் 14 மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு வாரத்திற்கான வேலை நேரத்தை 48 மணி நேரத்தில் இருந்து 45 மணி நேரமாகக் குறைத்த நிலையில்,

தற்போது மேலும் 5 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு வாரத்திற்கான அதிகபட்ச வேலை நேரம் 48 மணி நேரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan