'அந்த மனசுதான் சார்' கோரிக்கை வைத்த சிறுவர்கள் - உடனே நிறைவேற்றிய சூரி - Video வைரல்!
நடிகர் சூரி கேரவனை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்ட சிறுவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.
நடிகர் சூரி
கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த 'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தின் மூலம் காமெடியனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சூரி. பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் 'பரோட்டா சூரி' என்று அறியப்படுகிறார்.

பின்னர் நான் மகான் அல்ல, களவாணி, , வேலாயுதம், வாகை சூட வா, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, சிங்கம் 3, சீமராஜா உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் காமெடியனாக கலக்கினார்.
அதுமட்டுமல்லாமல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' என்ற படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதில் தனது சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார்.
நெகிழ்ச்சி செயல்
தற்போது நடிகர் சூரி நடித்து வரும் “கருடன்” திரைப்படத்தின் படப்படிப்பு தேனி அருகே வலையபட்டி கிராமத்தில் நடைபெற்றது. அங்கு கேரவனில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்து போது, அவரை பார்க்க கிராமத்து சிறுவர், சிறுமியர் அதிகளவில் கூடி காத்திருந்தனர்.

இதனையறிந்து வெளியே வந்த சூரி, சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினார். பின்னர் அவர்கள் கேரவன் வாகனத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் உள்ளே அழைத்துச் சென்று காண்பித்தார்.
இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "படப்பிடிப்பில், மகிழ்வித்து மகிழ்ந்த தருணம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு கீழ் நல்ல மனுஷன், சிறப்பு, அருமை அண்ணா, அந்த மனசுதான் சார் கடவுள் என்றெல்லாம் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan