தேவாலயங்களில் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி தகவல்

France Sexual abuse
By Petchi Avudaiappan Oct 05, 2021 10:11 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 பிரான்ஸ் நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜீன்-மார்க் சாவ் (Jean-Marc Sauve) தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 1950 முதல் இந்த கொடூரம் அங்கு அரங்கேறி வந்ததாக 2500 பக்கம் கொண்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த குற்றச் செயலை செய்தது சுமார் 3000 பேர். அதில் மூன்றில் இரண்டு பங்கு மத குருமார்கள் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 80 சதவிகிதம் பேர் சிறுவர்கள் என்றும், அவர்கள் மன ரீதியாகவும் அல்லது பாலியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை ஆண்டு காலம் இந்த பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த விசாரணை நடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், நீதிமன்றம், தேவாலயம், போலீஸ், பத்திரிகை செய்திகள் மாதிரியான தரவுகளை சேர்த்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தற்போது பிரான்ஸ் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.