பெண்கள் குழந்தை பெற்க வேண்டியவர்கள் , அவர்கள் மந்திரியாக முடியாது - தாலிபான்கள்

afganistan taliban
By Irumporai Sep 10, 2021 08:54 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பெண்கள் மந்திரிகளாக முடியாது, அவர்கள் குழந்தை பெற்க வேண்டியவர்கள் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது.

மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுதும் பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாலிபன்கள் செய்தி தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி, ஆப்கானிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை மந்திரி சபையில் அனுமதிக்க முடியாது எனவும், அவர்கள் பிரசவத்திற்க்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பெண்களை மந்திரி சபையில் அனுமதிப்பது அவர்களால் சுமக்க முடியாத பாரத்தை அவர்கள் கழுத்தில் வைப்பது போன்றது என தெரிவித்துள்ளார்.