முன்விரோதத்தால் சிறுவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வியாபாரி
டெல்லியில் முன் விரோதத்தால் வியாபாரி ஒருவரை சிறுவர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த கடை வியாபாரி ரெய்ஸ் அன்சாரி இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சிறுவர்கள், சனிக்கிழமை இரவு அன்சாரி தனது ஸ்கூட்டரை துடைத்து கொண்டு இருந்த போது முகமூடி அணிந்து ஸ்கேட்டிங் செய்தபடி வந்து சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனையடுத்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.