கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் விலக்கு: தமிழகஅரசு அறிவிப்பு

COVID-19 Tamil nadu
By Irumporai Aug 01, 2022 10:27 AM GMT
Report

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களிலும் கல்வி கட்டணம் கிடையாது. அவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு

தமிழகஅரசும், பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு தமிழகஅரசு ரூ.5லட்சம் வைப்பீடு உள்பட ஏராளமான சலுகைகள் அறிவித்துள்ளது .

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் விலக்கு: தமிழகஅரசு அறிவிப்பு | Children Lost Their Parents In Corona Tamil Nadu

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளி கல்லூரிகளில், கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

கட்டணம் தேவையில்லை

மேலும், அதே பள்ளி களில் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்திட வேண்டும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக் கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா காலத்தின்போது கிட்டத்தட்ட 200 மாணவர்களின் பெற்றோர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த தகவலை அடுத்து அந்த 200 மாணவர்களும் தனியார் பள்ளியில் படித்தாலும் கட்டணம் கட்டவேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.