காப்பகத்தில் உணவருந்திய சிறுவர்கள் உயிரிழப்பு : முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
குழந்தைகள் மரணம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில், திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ராக்கியாபாளையம் கிராமம், மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில்
தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில், மாதேஷ் (வயது 15), பாபு (வயது 13) மற்றும் ஆதிஷ் (வயது 8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்

முதலமைச்சர் நிதி
6.10.2022 அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் குழந்தைகள் காப்பக்கத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/0FsMYUnyiU
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 7, 2022
உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன்
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.