மழலையர் பள்ளிக் குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம் : அமைச்சர் தகவல்
மழலையர் பள்ளிக் குழந்தைகள் மாஸ்க் அணிய அவசியம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் இன்று முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்த நிலையில் தற்போது தொடங்கப்படுகிறது.
இந்த நிலையில் , சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், " பன்னோக்கு மருத்துவமனையில் ரூ.35 கோடி செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதும். மழலையர் பள்ளிக் குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.