பெண் குழந்தையை அடித்து கொன்ற குடிகார தகப்பன்!
குடிபோதையில் 15 மாத பெண் குழந்தையை அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாத்தகனுப்பூரு கிராமத்தை சேர்ந்த தந்தை மது தன்னுடைய 15 மாத பெண் குழந்தையை குடிபோதையில் அடித்து கொலை செய்த பரிதாப சம்பவம் நடைபெற்றது.
பார்த்தகனுப்பூரு கிராமத்தைச் சேர்ந்த மது என்பவர் முழு குடிபோதையில் குடும்ப பிரச்சனை காரணமாக தங்களுடைய 15 மாத பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்தார்.மனைவி மீது இருந்த கோபம்,குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்த அவர் தங்களுடைய 15 மாத குழந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார்.
இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நாயுடு பேட்டை போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலையாளி மதுவை தீவிரமாக தேடி வருகின்றனர்